Posts

Showing posts with the label பிரெஞ்சுமொழி

பிரெஞ்சுமொழி - உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் (FrenchMoli - French Vowels and Consonants in Tamil)

Image
ஒரு மனிதனின் உடலும் உயிரும் ஒருங்கே இணைந்து செயல்படுவது போன்றே, ஒரு மொழியின் எழுத்துக்களில் உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும் ஒருங்கிணைந்து குறிப்பிட்ட அம்மொழியின் உயிர்மெய் ஒலிகளை தோற்றுவிக்கின்றன.  தமிழ் மொழியில் போன்று, ஐரோப்பிய மொழிகளில் ஒவ்வொரு உயிர்மெய் எழுத்துக்கும் தனித்தனியாக எழுத்துருக்கள் இல்லை. எனவே அம்மொழியில் ஒரு மெய்யெழுத்தையும் உயிரெழுத்தையும் (ஒன்றுக்கு மேற்பட்டவையும் உள்ளன.) சேர்த்து எழுதியே உயிர்மெய் ஒலிகள் பெறப்படுகின்றன. எனவே பிரெஞ்சு கற்கும் நாம், பிரெஞ்சு மொழியில் எவ்வாறு ஒரு மெய்யெழுத்தும், உயிரெழுத்தும் இணைந்து உயிர்மெய் ஒலிகள் பெறப்படுகின்றன என்பதை அறிந்துக்கொள்ளல் மிகவும் அடிப்படையானது.  பிரெஞ்சுமொழி அரிச்சுவடியில் உள்ள 26 எழுத்துக்களில்; 6 உயிர் எழுத்துக்களும், 20 மெய்யெழுத்துக்களும் உள்ளன.   முதலில், பிரெஞ்சு மொழியில் உள்ள உயிரெழுத்துக்களை பார்ப்போம். பிரெஞ்சு மொழியில் உயிரெழுத்துக்களை " லே வொயல்" (Les Voyelles) என்பர்.  பிரெஞ்சு உயிரெழுத்துக்கள் (Les Voyelles) A = அ E = ஹு  I   =  ஈ  O = ஓ U = ஊ Y = இ (க...

FrenchMoli Introduction - பிரெஞ்சுமொழி வலைத்தள அறிமுகம்

Image
வணக்கம்! வாருங்கள் உறவுகளே!   இந்தப் பிரெஞ்சுமொழி - FRENCHMOLI வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சி!  முதலில், இத்தளத்தைப் பற்றியும் இதன் பாடத் திட்டம் பற்றியும் ஒரு சில வரிகள் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். நான் இத்தளத்தை ஆரம்பிக்கும் பொழுது, இதன் முதல் பாடம் எதுவாக இருக்கவேண்டும் என எண்ணியதில், புதிதாக ஒருவர் பிரான்சுக்கோ அல்லது பிரெஞ்சு மொழி பேசும் காலனியொன்றுக்கோ காலடி வைத்ததும், அவர் முதலில் எதிர்கொள்ளும் ஒரு பிரெஞ்சு மொழியினருடன் எவ்வாறு தொடர்பு கொள்வார்? அவரது தொடர்பாடலுக்கு முதலில் பயன்படும் சொற்கள் எவை? என நாம் பெற்றுக்கொண்ட பட்டறிவின் அடிப்படையில்; நாம் முதலில் அறிந்துக்கொள்ள வேண்டியது "Bonjour!" (வணக்கம்!) எனும் சொல்தான். எனவே அந்தச் சொல்லுடன் எமக்கு அடிக்கடி தேவைப்படும் :முகமன் சொற்கள்" முதன்மை பாடமாக இருக்க வேண்டும் என்பதையுணர்ந்தேன். அதன்பிறகு, "அறிமுக உரையாடல் சொற்கள்", சிறிய உரையாடலுக்கு தேவையான "அடிக்கடி பயன்படும் சொற்றொடர்கள்" போன்றவற்றை கற்பது அடுத்தக்கட்ட பாடங்களாக இருக்க வேண்டும் என...

Welcome to FrenchMoli! - பிரெஞ்சுமொழி வலைத்தளத்துக்கு நல்வரவு!

Image
  வணக்கம், வாருங்கள்! Bienvenue en Frenchmoli ! புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்தப் பிரெஞ்சுமொழி (FRENCHMOLI)  வலைத்தளத்திற்கு வருகைத் தந்திருக்கும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி! நீங்கள் பிரான்சுக்கு புதிதாக வந்தவராக இருக்கலாம். பிரான்சுக்கு வந்து ஒரு குறிப்பிட்ட காலமாகியும் கூட, பிரெஞ்சு மொழியை கற்கும் வாய்ப்பு அல்லது நேரம் கிட்டாதவராக இருக்கலாம். பிரான்சு வந்து வதிவிட/ குடியுரிமை போன்ற நிலையை எட்டுவதற்கான, பிரான்சு அரசு கோரும் A1, A2, B1 போன்ற பிரெஞ்சுமொழி தகமைகளுக்காக பிரெஞ்சு கற்றுக்கொண்டிருப்பவராக இருக்கலாம். பிரெஞ்சு மொழியை கற்று, கல்வித் தகமைகளுடன், பிரான்சில் கல்வி வீசா அல்லது தொழில் வீசா பெறுவதற்கான முயற்சியில் உள்ளவராகவும் இருக்கலாம். பிரான்சு நாட்டிற்கு வரும் எண்ணம் அல்லது அம்முயற்சியில் பிரெஞ்சு கற்கும் முனைப்பில் உள்ளவராகவும் இருக்கலாம். பிரெஞ்சு கற்றிருப்பினும், அதனை மேலும் மேம்படுத்திக்கொள்ளும் நோக்குடையவராகவும் இருக்கலாம். எதுவானாலும் பரவாயில்லை, இதோ இது உங்களுக்கான தளம்! இந்தப் பிரெஞ்சுமொழி வலைத்தளத்தில், பிரெஞ்சு அரிச்சுவடி முதல் பிரெஞ்சு இலக்கணம் வரை அனைத்த...