Posts

Showing posts with the label பிரெஞ்சு

பிரெஞ்சுமொழி - உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் (FrenchMoli - French Vowels and Consonants in Tamil)

Image
ஒரு மனிதனின் உடலும் உயிரும் ஒருங்கே இணைந்து செயல்படுவது போன்றே, ஒரு மொழியின் எழுத்துக்களில் உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும் ஒருங்கிணைந்து குறிப்பிட்ட அம்மொழியின் உயிர்மெய் ஒலிகளை தோற்றுவிக்கின்றன.  தமிழ் மொழியில் போன்று, ஐரோப்பிய மொழிகளில் ஒவ்வொரு உயிர்மெய் எழுத்துக்கும் தனித்தனியாக எழுத்துருக்கள் இல்லை. எனவே அம்மொழியில் ஒரு மெய்யெழுத்தையும் உயிரெழுத்தையும் (ஒன்றுக்கு மேற்பட்டவையும் உள்ளன.) சேர்த்து எழுதியே உயிர்மெய் ஒலிகள் பெறப்படுகின்றன. எனவே பிரெஞ்சு கற்கும் நாம், பிரெஞ்சு மொழியில் எவ்வாறு ஒரு மெய்யெழுத்தும், உயிரெழுத்தும் இணைந்து உயிர்மெய் ஒலிகள் பெறப்படுகின்றன என்பதை அறிந்துக்கொள்ளல் மிகவும் அடிப்படையானது.  பிரெஞ்சுமொழி அரிச்சுவடியில் உள்ள 26 எழுத்துக்களில்; 6 உயிர் எழுத்துக்களும், 20 மெய்யெழுத்துக்களும் உள்ளன.   முதலில், பிரெஞ்சு மொழியில் உள்ள உயிரெழுத்துக்களை பார்ப்போம். பிரெஞ்சு மொழியில் உயிரெழுத்துக்களை " லே வொயல்" (Les Voyelles) என்பர்.  பிரெஞ்சு உயிரெழுத்துக்கள் (Les Voyelles) A = அ E = ஹு  I   =  ஈ  O = ஓ U = ஊ Y = இ (க...

பிரெஞ்சுமொழி அரிச்சுவடி (French Alphabet in Tamil)

Image
ஆங்கில அரிச்சுவடியில் போன்றே பிரெஞ்சு அரிச்சுவடியிலும் அதே 26 உரோமன் எழுத்துக்களே உள்ளன. ஆனாலும் ஆங்கில எழுத்துக்களின் ஒலிப்பு முறைக்கும் பிரெஞ்சு எழுத்துக்களின் ஒலிப்பு முறைக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது.  எனவே பிரெஞ்சு மொழியை முழுமையாக கற்பதற்கு, நாம் முதலில் பிரெஞ்சு அரிச்சுவடியில் உள்ள எழுத்துக்களின் ஒலிப்பு முறையை சரியாக ஒலிக்க (உச்சரிக்க) கற்றுக்கொள்ள வேண்டும். கவனிக்கவும் : எழுத்துக்களின் வரிவடிவம் ஒரே மாதிரி இருப்பதால், ஆங்கில அரிச்சுவடியில் உள்ள எழுத்துகளை ஒலிப்பது/ உச்சரிப்பது போன்று பிரெஞ்சு எழுத்துக்களை உச்சரிக்கக் கூடாது. பிரெஞ்சுமொழியில், பிரெஞ்சு அரிச்சுவடியை “ லல்fபbபே fப்ரொன்சே” (L’alphabet Français) என்பர். இச்சொற்றொடரை பார்த்தீர்களானால், இதில் உள்ள `t` மற்றும் கடைசியில் உள்ள `s` எழுத்துக்கள் ஒலிக்கப்படுவதில்லை. அவற்றை பிரெஞ்சில் மௌன எழுத்துக்கள் (Lettres de silence) என்பர். அவற்றை எதிர்வரும் "பிரெஞ்சு ஒலிப்பு முறைமை" பாடங்களில் விரிவாகப் பார்க்கலாம்.  இன்று இப்பாடத்தை மட்டும் பார்ப்போம். பிரெஞ்சு நெடுங்கணக்கு அல்லது பிரெஞ்சு அரிச்சுவடி முதலில் பிரெஞ்ச...