பிரெஞ்சு - நிகழ்காலம் - தன்னிலை ஒருமை வாக்கியங்கள் (Je suis ...)
வணக்கம், வாருங்கள் உறவுகளே! பிரெஞ்சு மொழியில் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி பயன்படும் 25 நிகழ்கால வாக்கியங்களைக் கற்போம். இவை தன்மை ஒருமை வாக்கியங்களாகும். பொதுவாகத் தமிழ் வாக்கிய கட்டமைப்பு எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை (S + O + V) என்னும் வரிசையமைப்பைக் கொண்டிருக்கும். அதாவது எழுவாய் முதலிலும், செயப்படுபொருள் இரண்டாவதாகவும், பயனிலை கடைசியாகவும் அமையும். அதாவது, ஒரு சாதாரண நிகழ்கால தமிழ் வாக்கியத்தை எடுத்துக்கொண்டால், " நான் ... இருக்கிறேன். " என்று வரும். அதேவேளை, பிரெஞ்சு வாக்கிய கட்டமைப்பு எழுவாய் + பயனிலை + செயப்படுபொருள் (S + V + O) என்னும் வரிசையமைப்பைக் கொண்டிருக்கும். அதாவது எழுவாய் முதலிலும், பயனிலை இரண்டாவதாகவும், செயப்படுபொருள் கடைசியாகவும் அமையும். அதேவேளை, ஒரு சாதாரண நிகழ்கால பிரெஞ்சு வாக்கியத்தை எடுத்துக்கொண்டால், " Je suis ... " என்று வரும். எடுத்துக்காட்டாக: Je suis fatigué. நான் களைப்பாக இருக்கிறேன் . இந்த வேறுபாட்டை சரியாக விளங்கிக்கொண்டீர்களானால், பிரெஞ்சு மொழியின் வாக்கிய கட்டமைப்புகளை எளிதாகக் கற்றுக்கொள்ளலாம்.இதனை மேல...