வணக்கம் உறவுகளே! இந்தப் பிரெஞ்சுமொழி பாடத்தில், பிரெஞ்சு எண்களை 1 முதல் 100 வரை எப்படி எண்ண வேண்டும் என்று பார்ப்போம். பிரெஞ்சு மொழியில் எண்களை ' லெ நொம்bப்ர' (Les nombres) என்றழைப்பர். உங்கள் ஒலிப்புப் (உச்சரிப்பு) பயிற்சிக்காக, ஒவ்வொரு பிரெஞ்சு எண்ணினதும் ஒலிப்பு வடிவம் தமிழ் எழுத்துக்களில் எழுதிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ் எழுத்துக்கள் கொண்டு பிரெஞ்சு மொழிச் சொற்களை அல்லது பிரெஞ்சு மொழியின் ஒலிகளைத் துல்லியமாக எழுதிக்காட்டுதல் என்பது பெரும்பாலும் சாத்தியமானதல்ல. அதேவேளை பிரெஞ்சு எண்களின் ஒலிகளை எழுத்துவடிவில் எழுதிக் காட்டாமல், எவரும் எமது மொழிக் குடும்பத்துடன் தொடர்பில்லாத ஒரு ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த, பிரெஞ்சு மொழியின் ஒலிப்புமுறைமையை எளிதாகக் கற்கவும் இயலாது. எனவே முடிந்தவரை எளிதாகக் கற்பதற்குத் தமிழ் எழுத்துக்களால் எழுதிக்காட்டப்பட்டுள்ளன என்பதைக் கருத்தில் கொள்க. அதேவேளை தமிழ்த் தவிர்ந்த ஆங்கில எழுத்துக்களும் தமிழில் புழங்கும் கிரந்த எழுத்துக்களும் இடையிடையே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் கருத்தில் கொள்ளவும். கவனிக்கவும்: இன்னொன்றையும் நினைவில...
Les nombres de 0 à 1 000 000 000 வணக்கம், உறவுகளே! நாம் ஏற்கெனவே பிரெஞ்சு எண்கள் 1 முதல் இருந்து 100 வரை எப்படி எண்ண வேண்டும் என்பதைப் பார்த்தோம். ஆனால் இந்தப் பதிவில் சற்று வேறுபட்ட வகையில் எண்களை எப்படி எண்ணலாம் என்பதைப் பார்க்கப் போகிறோம். அதாவது, ஒன்று, இரண்டு, மூன்று எனும் வரிசைப்படி அல்லாமல், சுழியம், பத்து, இருபது, முப்பது எனும் வரிசையில். அதுமட்டுமல்ல; நூறுக்குப் பிறகு, ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் எனக் கடைசியாக ஒரு மில்லியாட் வரையும், பிரெஞ்சு மொழியில் எண்களை எப்படி எண்ண வேண்டும் என்பதைப் பார்ப்போம். குறிப்பு-1: எண்களைப் பிரெஞ்சில் ஒலிக்கும் போது, அவைக்கான தமிழ் ஒலிப்பு வடிவம் தமிழில் எழுதிக்காட்டப்பட்டுள்ளன. அப்போது, சிலவிடங்களில் உரோமன் எழுத்துகளும் தமிழில் புழங்கும் கிரந்த எழுத்துகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும். குறிப்பு-2: பிரெஞ்சு மொழியின் எண்களை இலக்கங்களால் எழுதுவதானாலும் சரி, எழுத்துகளால் எழுதுவதானாலும் சரி, ஒப்பீட்டளவில் ஏனைய மொழிகளைவிட மிகவும் சிக்கலானவை. இச்சிக்கலைத் தீர்க்கும் வகையில் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவ...
வணக்கம் உறவுகளே! இன்று நாம் இந்தப் பிரஞ்சுமொழி பாடத்தில், பிரெஞ்சு மொழியில் எப்படி கிழமை நாட்களைக் கூறுவது என்று பார்ப்போம். பிரெஞ்சு மொழியைக் கற்கும் நாம் முதலில் பிரெஞ்சு மொழியின் அடிப்படை சொற்களை அறிந்துவைத்துக் கொள்ள வேண்டும். பிரெஞ்சு மொழியின் கிழமை நாட்களின் பெயர்களையும் அவற்றை எப்படிப் பிரெஞ்சில் ஒலிப்பது என்பதையும் கட்டாயம் அறிந்து வைத்துக்கொள்ளுதல் மிகவும் பயனுள்ளதாகும். "கிழமையின் நாட்கள்" என்பதைப் பிரெஞ்சு மொழியில் “Les jours de la semaine” என்பர். பிரெஞ்சுக் கிழமை நாட்களின், பிரெஞ்சு ஒலிப்பை எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வகையில், அவற்றைக் கீழே நீல நிறத்தில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. அதேவேளை அவற்றை தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதிக் காட்ட முடியாது என்பதால், தமிழில் புழங்கும் கிரந்த எழுத்துக்களையும், உரோமன் எழுத்துக்களையும் கலந்து எழுதிக்காட்டப்பட்டுள்ளன என்பதையும் கருத்தில் கொள்க. பிரெஞ்சு பிரெஞ்சு ஒலிப்பு தமிழ் Lundi லந்தி திங்கள் Mardi மர்dதி செவ்வாய் Mercredi மெர்கிறdதி புதன் Jeudi ஜுdதி வியாழன் Vendredi வோந்திறdதி வெள்ளி Samdi சம்dதி சனி Dimanche dதிமோஷ் ...
Comments
Post a Comment