Posts

Showing posts from June, 2021

பிரெஞ்சு எண்கள் 1 - 100 (French Numbers 1 - 100 in Tamil)

Image
வணக்கம் உறவுகளே!  இந்தப் பிரெஞ்சுமொழி பாடத்தில், பிரெஞ்சு எண்களை 1 முதல் 100 வரை எப்படி எண்ண வேண்டும் என்று பார்ப்போம். பிரெஞ்சு மொழியில் எண்களை ' லெ நொம்bப்ர' (Les nombres) என்றழைப்பர். உங்கள் ஒலிப்புப் (உச்சரிப்பு) பயிற்சிக்காக, ஒவ்வொரு பிரெஞ்சு எண்ணினதும் ஒலிப்பு வடிவம் தமிழ் எழுத்துக்களில் எழுதிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ் எழுத்துக்கள் கொண்டு பிரெஞ்சு மொழிச் சொற்களை அல்லது பிரெஞ்சு மொழியின் ஒலிகளைத் துல்லியமாக எழுதிக்காட்டுதல் என்பது பெரும்பாலும் சாத்தியமானதல்ல. அதேவேளை பிரெஞ்சு எண்களின் ஒலிகளை எழுத்துவடிவில் எழுதிக் காட்டாமல், எவரும் எமது மொழிக் குடும்பத்துடன் தொடர்பில்லாத ஒரு ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த, பிரெஞ்சு மொழியின் ஒலிப்புமுறைமையை எளிதாகக் கற்கவும் இயலாது. எனவே முடிந்தவரை எளிதாகக் கற்பதற்குத் தமிழ் எழுத்துக்களால் எழுதிக்காட்டப்பட்டுள்ளன என்பதைக் கருத்தில் கொள்க. அதேவேளை தமிழ்த் தவிர்ந்த ஆங்கில எழுத்துக்களும் தமிழில் புழங்கும் கிரந்த எழுத்துக்களும் இடையிடையே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் கருத்தில் கொள்ளவும். கவனிக்கவும்: இன்னொன்றையும் நினைவில...