பிரெஞ்சு கிழமை நாட்கள் (French Days of the Week in Tamil)
வணக்கம் உறவுகளே!
இன்று நாம் இந்தப் பிரஞ்சுமொழி பாடத்தில், பிரெஞ்சு மொழியில் எப்படி கிழமை நாட்களைக் கூறுவது என்று பார்ப்போம். பிரெஞ்சு மொழியைக் கற்கும் நாம் முதலில் பிரெஞ்சு மொழியின் அடிப்படை சொற்களை அறிந்துவைத்துக் கொள்ள வேண்டும். பிரெஞ்சு மொழியின் கிழமை நாட்களின் பெயர்களையும் அவற்றை எப்படிப் பிரெஞ்சில் ஒலிப்பது என்பதையும் கட்டாயம் அறிந்து வைத்துக்கொள்ளுதல் மிகவும் பயனுள்ளதாகும்.
- "கிழமையின் நாட்கள்" என்பதைப் பிரெஞ்சு மொழியில் “Les jours de la semaine” என்பர்.
பிரெஞ்சுக் கிழமை நாட்களின், பிரெஞ்சு ஒலிப்பை எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வகையில், அவற்றைக் கீழே நீல நிறத்தில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. அதேவேளை அவற்றை தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதிக் காட்ட முடியாது என்பதால், தமிழில் புழங்கும் கிரந்த எழுத்துக்களையும், உரோமன் எழுத்துக்களையும் கலந்து எழுதிக்காட்டப்பட்டுள்ளன என்பதையும் கருத்தில் கொள்க.
இது ஒரு குரும்பாடமாகும். இருப்பினும் இச்சொற்கள் உங்கள் மனதில் பதியும் வரை திரும்பத் திரும்பக் கூறி மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
பிரெஞ்சு இலக்கணம் கற்க தொடங்கும் முன், பிரெஞ்சு மொழியின் அடிப்படை சொற்களையும், அடிக்கடி புழங்கும் சிற்சிறு சொற்றொடர்களையும் கற்றுக்கொள்ளல் பயன்மிக்கதாகும்.
நன்றி!
அன்புடன்
ச. தங்கவடிவேல், பிரான்சு
_ _ _
Comments
Post a Comment