பிரெஞ்சு எண்கள் 0 இருந்து 1,000,000,000 வரை (French Numbers in a Different Order : 0 - 1,000,000,000)
![]() |
Les nombres de 0 à 1 000 000 000 |
நாம் ஏற்கெனவே பிரெஞ்சு எண்கள் 1இல் இருந்து 100 வரை எப்படி எண்ண வேண்டும் என்பதைப் பார்த்தோம். ஆனால் இந்தப் பதிவில் சற்று வேறுபட்ட வகையில் எண்களை எப்படி எண்ணலாம் என்பதைப் பார்க்கப் போகிறோம்.
அதாவது, ஒன்று, இரண்டு, மூன்று எனும் வரிசைக் கிரமத்தில் அல்லாமல், சுழியம், பத்து, இருபது, முப்பது எனும் வரிசையில்.
அதுமட்டுமல்ல; நூறுக்கு பிறகு, ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் எனக் கடைசியாக ஒரு மில்லியாட் வரையும் பிரெஞ்சு மொழியில் எண்களை எப்படி எண்ணுவது என்று பார்ப்போம்.
குறிப்பு-1: எண்களை பிரெஞ்சில் ஒலிக்கும் போது, அவைக்கான தமிழ் ஒலிப்பு வடிவம் தமிழில் எழுதிக்காட்டப்பட்டுள்ளன. அப்போது, சிலவிடங்களில் உரோமன் எழுத்துகளையும், தமிழில் புழங்கும் கிரந்த எழுத்துகளையும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
குறிப்பு-2: பிரெஞ்சு மொழியின் எண்களை இலக்கங்களால் எழுதுவதானாலும் சரி, எழுத்துகளால் எழுதுவதானாலும் சரி, இவை ஒப்பீட்டளவில் மிகவும் சிக்கலானவை. இச்சிக்கலை தீர்க்கும் வகையில் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை கவனிக்கவும்.
0 முதல் 90 வரை பிரெஞ்சு எண்கள்
“0” இலிருந்து பத்து, இருபது, முப்பது, எனத் தொண்ணூறு வரை எப்படி எண்ணுவது என்று முதலில் பார்ப்போம். இலக்க வரிசையை அடுத்து, இவ்வெண்களை பிரெஞ்சு எழுத்துகளிலும், இவைக்கான ஒலிப்பு வடிவங்கள் தமிழிலும் எழுதிக்காட்டப்பட்டுள்ளன.
1 முதல் 91 வரை பிரெஞ்சு எண்கள்
“1” இலிருந்து பதினொன்று, இருபத்தொன்று, முப்பத்தொன்று, எனத் தொண்ணூற்றியொன்று வரை எப்படி எண்ணுவது என்பதை இப்பொழுது பார்ப்போம். இலக்க வரிசையை அடுத்து, இவ்வெண்களை பிரெஞ்சு எழுத்துகளிலும், இவைக்கான ஒலிப்பு வடிவங்கள் தமிழிலும் எழுதிக்காட்டப்பட்டுள்ளன.
2 முதல் 92 வரை பிரெஞ்சு எண்கள்
“2” இலிருந்து பன்னிரெண்டு, இருபத்திரெண்டு, முப்பத்திரெண்டு, எனத் தொண்ணூற்றிரெண்டு வரை எப்படி எண்ணுவது என்பதை இங்கே பார்ப்போம். இலக்க வரிசையை அடுத்து, இவ்வெண்களை பிரெஞ்சு எழுத்துகளிலும், அவைக்கான ஒலிப்பு வடிவங்கள் தமிழிலும் எழுதிக்காட்டப்பட்டுள்ளன.
3 - 93 வரை பிரெஞ்சு எண்கள்
“3” இலிருந்து பதின்மூன்று, இருபத்திமூன்று, முப்பத்திமூன்று, எனத் தொண்ணூற்றிமூன்று வரை எப்படி எண்ணுவது என்பதை இப்பொழுது பார்ப்போம். இலக்க வரிசையை அடுத்து, இவ்வெண்களை பிரெஞ்சு எழுத்துகளிலும், அவைக்கான ஒலிப்பு வடிவங்கள் தமிழிலும் எழுதிக்காட்டப்பட்டுள்ளன..
4 - 94 வரை பிரெஞ்சு எண்கள்
“4” இலிருந்து பதின்நான்கு, இருபத்திநான்கு, முப்பத்திநான்கு, எனத் தொண்ணூற்றிநான்கு வரை எப்படி எண்ணுவது என்பதை இப்பொழுது பார்ப்போம். இலக்க வரிசையை அடுத்து, இவ்வெண்களை பிரெஞ்சு எழுத்துகளிலும், அவைக்கான ஒலிப்பு வடிவங்கள் தமிழிலும் எழுதிக்காட்டப்பட்டுள்ளன.
5 - 95 வரை பிரெஞ்சு எண்கள்
“5” இலிருந்து பதின்மூன்று, இருபத்திமூன்று, முப்பத்திமூன்று, எனத் தொண்ணூற்றிமூன்று வரை எப்படி எண்ணுவது என்பதை இப்பொழுது பார்ப்போம். இலக்க வரிசையை அடுத்து, இவ்வெண்களை பிரெஞ்சு எழுத்துகளிலும், அவைக்கான ஒலிப்பு வடிவங்கள் தமிழிலும் எழுதிக்காட்டப்பட்டுள்ளன.
6 - 96 வரை பிரெஞ்சு எண்கள்
“6” இலிருந்து பதினாறு, இருபத்தியாறு, முப்பத்தியாறு, எனத் தொண்ணூற்றியாறு வரை எப்படி எண்ணுவது என்பதை இப்பொழுது பார்ப்போம். இலக்க வரிசையை அடுத்து, இவ்வெண்களை பிரெஞ்சு எழுத்துகளிலும், அவைக்கான ஒலிப்பு வடிவங்கள் தமிழிலும் எழுதிக்காட்டப்பட்டுள்ளன.
7 - 97 வரை பிரெஞ்சு எண்கள்
“7” இலிருந்து பதினேழு, இருபத்தியேழு, முப்பத்தியேழு, எனத் தொண்ணூற்றியேழு வரை எப்படி எண்ணுவது என்பதை இப்பொழுது பார்ப்போம். இலக்க வரிசையை அடுத்து, இவ்வெண்களை பிரெஞ்சு எழுத்துகளிலும், அவைக்கான ஒலிப்பு வடிவங்கள் தமிழிலும் எழுதிக்காட்டப்பட்டுள்ளன.
8 - 98 வரை பிரெஞ்சு எண்கள்
“8” இலிருந்து பதினெட்டு, இருபத்தியெட்டு, முப்பத்தியெட்டு, எனத் தொண்ணூற்றியெட்டு வரை எப்படி எண்ணுவது என்பதை இப்பொழுது பார்ப்போம். இலக்க வரிசையை அடுத்து, இவ்வெண்களை பிரெஞ்சு எழுத்துகளிலும், அவைக்கான ஒலிப்பு வடிவங்கள் தமிழிலும் எழுதிக்காட்டப்பட்டுள்ளன.
9 - 99 வரை பிரெஞ்சு எண்கள்
“9” இலிருந்து பத்தொன்பது, இருபத்தொன்பது, முப்பத்தொன்பது, எனத் தொண்ணூற்றியொன்பது வரை எப்படி எண்ணுவது என்பதை இப்பொழுது பார்ப்போம். இலக்க வரிசையை அடுத்து, இவ்வெண்களை பிரெஞ்சு எழுத்துகளிலும், அவைக்கான ஒலிப்பு வடிவங்கள் தமிழிலும் எழுதிக்காட்டப்பட்டுள்ளன.
100-900 வரை பிரெஞ்சு எண்கள்
இனி “100” இருந்து இருநூறு, முன்னூறு, நானூறு, எனத் தொள்ளாயிரம் வரை எப்படி எண்ணுவது என்பதை கீழே பார்ப்போம். இலக்க வரிசையை அடுத்து, இவ்வெண்களை பிரெஞ்சு எழுத்துகளிலும், அவைக்கான ஒலிப்பு வடிவங்கள் தமிழிலும் எழுதிக்காட்டப்பட்டுள்ளன.
குறிப்பு-1: பிரெஞ்சில் நூறுக்கு உட்பட்ட தானங்களை எழுத்துகளால் எழுதும் போது, கட்டாயமாக இடைகோடு (-) இட வேண்டும். (எ.கா., 99 க்கு quatre-vingt-dix-neuf) என இடைகோடு எழுதப்பட்டுள்ளதைக் காண்க.
அதேவேளை, கீழுள்ள எண்கள் எப்படி எழுதப்பட்டுள்ளன எனப் பார்க்கவும். அவற்றில் இடைகோடு இடாமல் எழுதப்பட்டுள்ளன.
குறிப்பு -2:: “நூறு’ என்று எழுதியுள்ளதைப் பாருங்கள். அதன்பின்னர் “இருநூறு”, “முன்னூறு” எனத் தொள்ளாயிரம் வரை எழுதப்பட்டிருப்பவற்றில் “cent” உடன் ஒரு “s” எழுத்தும் சேர்த்து பன்மையாக எழுதப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்.
1,000 - 9,000 வரை பிரெஞ்சு எண்கள்
“1,000” ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம், முவ்வாயிரம், நான்காயிரம், என ஒன்பதாயிரம் வரை எப்படி எண்ணுவது என்பதை கீழே பார்ப்போம். இலக்க வரிசையை அடுத்து, இவ்வெண்களை பிரெஞ்சு எழுத்துகளிலும், அவைக்கான ஒலிப்பு வடிவங்கள் தமிழிலும் எழுதிக்காட்டப்பட்டுள்ளன.
குறிப்பு-1: ஒரு தானத்தின் பின், மூன்று தானங்கள் வந்தால், தமிழில் (ஆங்கிலம் உட்பட) இடையே ஒரு காற்புள்ளி இடுவது வழமை; ஆனால், பிரெஞ்சு மொழியில் மூன்று தானங்களுக்கு முன்பு காற்புள்ளி இடும் வழமையில்லை; மாறாக இடைவெளியிடல் இம்மொழியின் இயல்பு அல்லது பிரெஞ்சு மொழியினரின் வழமை ஆகும். (சிலவிடங்களில் காற்புள்ளிக்கு பதிலாக புள்ளி இடுதல் பயன்பாட்டில் உள்ளது: ஆனால் அது மிகவும் அரிதான பயன்பாடாகும்.)
குறிப்பு -2:: மேலே “இருநூறு”, “முன்னூறு” எனத் தொள்ளாயிரம் வரை எழுதப்பட்டிருப்பவற்றில் “cent” உடன் ஒரு “s” எழுத்தும் சேர்த்து பன்மையாக எழுதப்படுவதைப் போன்று இரண்டாயிரம், மூவாயிரம் என ஒன்பதாயிரம் வரை பிரெஞ்சில் எழுதும் போது பன்மையாக எழுதப்படுவதில்லை. கீழே எப்படி எழுதப்பட்டுள்ளன என்பதைக் கவனிக்கவும்.
10,000 - 90,000 வரை பிரெஞ்சு எண்கள்
“10,000” பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம், முப்பதாயிரம், நாற்பதாயிரம், எனத் தொண்ணூறாயிரம் வரை எப்படி எண்ணுவது என்பதை கீழே பார்ப்போம். இலக்க வரிசையை அடுத்து, இவ்வெண்களை பிரெஞ்சு எழுத்துகளிலும், அவைக்கான ஒலிப்பு வடிவங்கள் தமிழிலும் எழுதிக்காட்டப்பட்டுள்ளன.
குறிப்பு-1: ஒரு தானத்தின் பின், மூன்று தானங்கள் வந்தால், தமிழில் (ஆங்கிலம் உட்பட) இடையே ஒரு காற்புள்ளி இடுவது வழமை; ஆனால், பிரெஞ்சு மொழியில் மூன்று தானங்களுக்கு முன்பு காற்புள்ளி இடும் வழமையில்லை; மாறாக இடைவெளியிடல் இம்மொழியின் இயல்பு அல்லது பிரெஞ்சு மொழியினரின் வழமை ஆகும். (சிலவிடங்களில் காற்புள்ளிக்கு பதிலாக புள்ளி இடுதல் பயன்பாட்டில் உள்ளது: ஆனால் அது மிகவும் அரிதான பயன்பாடாகும்.) கீழே எப்படி எழுதப்பட்டுள்ளன என்பதைக் காண்க.
குறிப்பு-2: பிரெஞ்சில் நூறுக்கு உட்பட்ட தானங்களை எழுத்துகளால் எழுதும் போது, கட்டாயமாக இடைகோடு (-) இட வேண்டும். (எ.கா., Soixante-dix mille) போன்று கீழே எழுபது; என்பது, தொண்ணூறு என்றெழுதும் போது இடைகோடு இடப்பட்டுள்ளதைக் காண்க.).
100,000 - 900,000 வரை பிரெஞ்சு எண்கள்
“100,000” ஒரு இலட்சத்திலிருந்து இரண்டு-இலட்சம், மூன்று-இலட்சம், நான்கு-இலட்சம், என ஒன்பது-இலட்சம் வரை எப்படி எண்ணுவது என்பதை கீழே பார்ப்போம். இலக்க வரிசையை அடுத்து, இவ்வெண்களை பிரெஞ்சு எழுத்துகளிலும், அவைக்கான ஒலிப்பு வடிவங்கள் தமிழிலும் எழுதிக்காட்டப்பட்டுள்ளன.
குறிப்பு-1: இங்கேயும் மூன்று தானங்களுக்கு முன்பு காற்புள்ளி இடப்படாமல் எழுதப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
குறிப்பு-2: எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளவற்றிலும் இடைகோடு இடப்படாமல் எழுதப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
1,000,000 - 9,000,000 வரை பிரெஞ்சு எண்கள்
“1,000,000” பத்து-இலட்சத்திலிருந்து இருபது-இலட்சம், முப்பது-இலட்சம், நாற்பது-இலட்சம், என ஒன்பது-இலட்சம் வரை எப்படி எண்ணுவது என்பதை கீழே பார்ப்போம். இலக்க வரிசையை அடுத்து, இவ்வெண்களை பிரெஞ்சு எழுத்துகளிலும், அவைக்கான ஒலிப்பு வடிவங்கள் தமிழிலும் எழுதிக்காட்டப்பட்டுள்ளன.
குறிப்பு-1: இங்கேயும் மூன்று தானங்களுக்கு முன்பு காற்புள்ளி இடப்படாமல் எழுதப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
குறிப்பு-2: எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளவற்றிலும் இடைகோடு இடப்படாமல் எழுதப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
குறிப்பு-3: எழுத்துகளில் இருபது-இலட்சம், முப்பது-இலட்சம் என எழுதப்பட்டிருப்பவற்றை கவனிக்கவும்; எ.கா., “deux millions” இதில் ஒரு “s” எழுத்தும் சேர்த்து பன்மையாக எழுதப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்.
10,000,000 - 90,000,000 வரை பிரெஞ்சு எண்கள்
“10,000,000” ஒரு கோடியிலிருந்து இரண்டு-கோடி, மூன்று-கோடி, நான்கு-கோடி, என ஒன்பது-கோடி வரை எப்படி எண்ணுவது என்பதை இப்பொழுது பார்ப்போம். இலக்க வரிசையை அடுத்து, இவ்வெண்களை பிரெஞ்சு எழுத்துகளிலும், அவைக்கான ஒலிப்பு வடிவங்கள் தமிழிலும் எழுதிக்காட்டப்பட்டுள்ளன.
குறிப்பு-2: பிரெஞ்சில் நூறுக்கு உட்பட்ட தானங்களை எழுத்துகளால் எழுதும் போது, கட்டாயமாக இடைகோடு (-) இட வேண்டும். (எ.கா., soixante-dix millions) கீழே எப்படி எழுதப்பட்டுள்ளன என்பதை காண்க.
1,000,000,000 - நூறு கோடி
ஒரு இலக்கத்துடன் ஒன்பது தானங்கள் வந்தால், தமிழில் அதனை நூறு கோடி என்போம். பிரெஞ்சில் “அ மில்லியாட்” என்பர். இலக்க வரிசையை அடுத்து, இவ்வெண்ணை பிரெஞ்சு எழுத்துகளிலும், அதுக்கான ஒலிப்பு வடிவம் தமிழிலும் எழுதிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை கவனத்தில் கொள்ளவும்.
குறிப்பு-1: ஒரு தானத்தின் பின், மூன்று தானங்கள் வந்தால், தமிழில் (ஆங்கிலம் உட்பட) இடையே ஒரு காற்புள்ளி இடுவது வழமை; ஆனால், பிரெஞ்சு மொழியில் மூன்று தானங்களுக்கு முன்பு காற்புள்ளி இடும் வழமையில்லை; மாறாக இடைவெளியிடல் இம்மொழியின் இயல்பு அல்லது பிரெஞ்சு மொழியினரின் வழமை ஆகும். (சிலவிடங்களில் காற்புள்ளிக்கு பதிலாக புள்ளி இடுதல் பயன்பாட்டில் உள்ளது.)
எடுத்துக்காட்டாக:
- 1,000,000,000 - தமிழ், ஆங்கிலம் உட்பட (காற்புள்ளி)
- 1 000 000 000 - பிரெஞ்சு, சில ஐரோப்பிய மொழிகளில் (இடைவெளி)
- 1.000.000.000 - பிரெஞ்சு, சில ஐரோப்பிய மொழிகளில் மாற்றீடாக (புள்ளி)
பிரெஞ்சு மொழி உலகின் ஏனைய மொழிகள் போன்றல்லாமல் பல்வேறு தனித்த கூறுகளை கொண்ட மொழியாகும். இம்மொழியை கற்போருக்கு ஆரம்பத்தில் மிகவும் சிக்கலானதாக தோன்றலாம். (பிரெஞ்சை தாய்மொழியாக கொண்டோரிடமும் இச்சிக்கல்கள் இருப்பதை காணலாம்.) ஆனால் இவற்றை சற்று ஆழ்ந்து கற்றுக்கொண்டோமானால், எளிதாக கற்றுக்கொள்ளலாம்.
“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்!” தொடர்ந்து பயிற்சி செய்தால் பிரெஞ்சும் வசப்படும்.
நன்றி!
அன்புடன்
ச. தங்கவடிவேல், பிரான்சு
Comments
Post a Comment