பிரெஞ்சு எண்கள் 1 - 100 (French Numbers 1 - 100 in Tamil)
வணக்கம் உறவுகளே!
இந்தப் பிரெஞ்சுமொழி பாடத்தில், பிரெஞ்சு எண்களை 1 முதல் 100 வரை எப்படி எண்ண வேண்டும் என்று பார்ப்போம். பிரெஞ்சு மொழியில் எண்களை 'லெ நொம்bப்ர' (Les nombres) என்றழைப்பர்.
உங்கள் ஒலிப்புப் (உச்சரிப்பு) பயிற்சிக்காக, ஒவ்வொரு பிரெஞ்சு எண்ணினதும் ஒலிப்பு வடிவம் தமிழ் எழுத்துக்களில் எழுதிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ் எழுத்துக்கள் கொண்டு பிரெஞ்சு மொழிச் சொற்களை அல்லது பிரெஞ்சு மொழியின் ஒலிகளைத் துல்லியமாக எழுதிக்காட்டுதல் என்பது பெரும்பாலும் சாத்தியமானதல்ல. அதேவேளை பிரெஞ்சு எண்களின் ஒலிகளை எழுத்துவடிவில் எழுதிக் காட்டாமல், எவரும் எமது மொழிக் குடும்பத்துடன் தொடர்பில்லாத ஒரு ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த, பிரெஞ்சு மொழியின் ஒலிப்புமுறைமையை எளிதாகக் கற்கவும் இயலாது. எனவே முடிந்தவரை எளிதாகக் கற்பதற்குத் தமிழ் எழுத்துக்களால் எழுதிக்காட்டப்பட்டுள்ளன என்பதைக் கருத்தில் கொள்க. அதேவேளை தமிழ்த் தவிர்ந்த ஆங்கில எழுத்துக்களும் தமிழில் புழங்கும் கிரந்த எழுத்துக்களும் இடையிடையே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் கருத்தில் கொள்ளவும்.
கவனிக்கவும்:
இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள்; அது ஏற்கெனவே எமது தமிழர்களான பெரும்பாலோரது புழக்கத்தில் இருக்கும் தங்கிலிஷ் அல்லது தமிங்கில முறையில் ஆங்கிலத்தில் எழுத்துக்களைக் கூட்டி வாசிக்கும் முறையில் பிரெஞ்சுமொழிச் சொற்களை வாசிக்க முடியாது. எடுத்துக்காட்டாகச் சில சொற்களைப் பாருங்கள்: சுழியத்தை ஆங்கிலத்தில் (“zero”/”zசீரோ”) என்பர், ஆனால் அதே எழுத்துக்களில் எழுதி பிரெஞ்சில் (“zéro”/”zசேரோ”) என்று வாசிக்க வேண்டும். ஆங்கிலத்தில் (“six“/“சிக்ஸ்”) என்று வாசித்துப் பழக்கப்பட்ட சொல்லை; பிரெஞ்சில் (“six”/“சீஸ்”) என்று வாசிக்க வேண்டும். இப்படிப் பல வேறுபாடுகள் உள்ளன. எனவே ஆங்கிலத்திற்கும் பிரெஞ்சுக்குமான ஒலிப்புமுறைமை முற்றிலும் வேறுபட்டது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு பாடத்திற்க்குச் செல்வோம்..
பிரெஞ்சு எண்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை நாம் மேலே பார்த்தோம். அதில் சில எண்களை எண்ணும் போது அல்லது ஒலிக்கும் போது உங்களுக்குச் சில கேள்விகள் எழுந்திருக்கலாம், அவை நாம் நமது தாய்மொழியில் தமிழ் எண்களை எண்ணும் முறைக்கும் பிரெஞ்சு மொழியில் எண்களை எண்ணும் முறைக்கும் இடையே உள்ள வேறுபாடு தொடர்பானதாக இருந்திருக்கும். உண்மையில், பிரெஞ்சில் எண்களை எண்ணும் முறைமை ஒரு ஒழுங்கற்ற முறையானதாகும்.
கீழே வழங்கப்பட்டுள்ள மேலதிக விளக்கங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கலாம். அத்துடன் பிரெஞ்சு எண்களின் ஒலிப்புமுறைத் தொடர்பான விளக்கங்களையும் பாருங்கள்.
பிரெஞ்சு எண்களின் ஒலிப்புமுறை
இலக்கம் 11 இலிருந்து 16 வரை, ஆங்கிலத்தில் எண்களை எண்ணுவது போன்றே இருக்கும்.
11
12
13
14
15
16
அதன்பின்னர் 17, 18, 19 போன்ற எண்களை, பத்து + ஏழு, பத்து + எட்டு, பத்து + ஒன்பது போன்றவாறு எண்ண வேண்டும்.
10+7 = 17
10+8 = 18
10+9 = 19
அதன்பின் அதே கூட்டல் முறையில் ஒரே சீராக 69 வரை எண்ணலாம்.
60+1 = 61
60+2 = 62
60+3 = 63
60+4 = 64
60+5 = 65
60+6 = 66
60+7 = 67
60+8 = 68
60+9 = 69
அதன் பின்னர்: 70 தாவது எண்ணுக்கென்று பிரெஞ்சில் ஒரு தனிச் சொல் இல்லை. எனவே எழுபதை, அறுபது + பத்து (60+10) = 70 என்று கூட்டல் வடிவில் எண்ணவேண்டும். அதனைத் தொடர்ந்து அறுபது + பதினொன்று (60+11) = 71, அறுபது + பன்னிரண்டு (60+12) = 72 என அறுபது + பத்தொன்பது (60+19) = 79 வரை அதே முறையில் எண்ண வேண்டும்.
60+10 = 70
60+11 = 71
60+12 = 72
60+13 = 73
60+14 = 74
60+15 = 75
60+16 = 76
60+17 = 77
60+18 = 78
60+19 = 79
80 தாவது எண்ணிற்கு என்றும் ஒரு தனிச் சொல் பிரெஞ்சில் இல்லை. இதுவரை கூட்டல் வடிவில் இருந்த பிரெஞ்சு எண்முறை, இனி பெருக்கலும் கூட்டலுமாக மாற்றம் பெறும். அதன்படி எண்பதை, நான்கு x இருபது (4x20 = 80) எனப் பெருக்கி எண்ண வேண்டும். தொடர்ந்து நான்கு x இருபது + ஒன்று (4x20+1 = 81), நான்கு x இருபது + இரண்டு (4x20+2 = 82) என நான்கு x இருபது + ஒன்பது (4x20+9 = 89) வரை தொடரும்.
எண்பதைப் பிரெஞ்சில் எழுதும் பொழுது மட்டும் “Quatre-vingts” நான்கு x இருபதுகள் என்பது போன்று இறுதியில் ஒரு “s“ எழுத்தையும் சேர்த்து எழுத வேண்டும். அதற்கான காரணமோ விளக்கமோ எங்கும் காண்பதற்கில்லை. சில பிரெஞ்சு ஆசிரியர்கள் அது ஒரு தனித்துவமான எண் என்கின்றனர். நாமும் அப்படியே கொள்வோமாக!
4x20 = 80
4x20+1 = 81
4x20+2 = 82
4x20+3 = 83
4x20+4 = 84
4x20+5 = 85
4x20+6 = 86
4x20+7 = 87
4x20+8 = 88
4x20+9 = 89
இனி 90 க்கும் ஒரு தனிச் சொல் பிரெஞ்சில் இல்லை. எனவே நான்கு x இருபது + பத்து (4x20+10 = 90) என நான்குடன் இருபதைப் பெருக்கி, அத்தொகையுடன் பத்தைக் கூட்டி எண்ண வேண்டும். அதனைத் தொடர்ந்து நான்கு x இருபது + பதினொன்று (4x20+11 = 91), நான்கு x இருபது + பன்னிரெண்டு (4x20+12 = 92) என நான்கு x இருபது + பத்தொன்பது (4x20+19 = 99) வரை எண்ண வேண்டும்.
4x20+10 = 90
4x20+11 = 91
4x20+12 = 92
4x20+13 = 93
4x20+14 = 94
4x20+15 = 95
4x20+16 = 96
4x20+17 = 97
4x20+18 = 98
4x20+19 = 99
100 நூறு என்னும் எண்ணைப் பிரெஞ்சில் “சொன்” என்பர்; அதில் “ன்” எழுத்தை முழுதுமாக ஒலிக்காமல் (கால் மாத்திரை அளவுக்கும் குறைவாக) மூக்கொலியுடன் ஒலிக்க வேண்டும்.
மேலே உள்ள முறையில் தான் பிரெஞ்சு மொழியின் எண்களை எண்ணும் முறைமை உள்ளது. எனவே இம்முறைமைப் பற்றி நாம் அதிகம் ஆய்வு செய்வதையோ சிந்திப்பதையோ விட்டுவிட்டு, அவற்றை மனப்பாடம் செய்து மனதில் பதித்துக் கொள்வது ஒன்றுதான் எமக்கிருக்கும் ஒரே வழியாகும்.
இரண்டாம் மொழியாக அல்லது மூன்றாம் மொழியாகப் பிரெஞ்சுமொழியைக் கற்கும் எமக்கு இது கடினமாகத் தோன்றலாம்; ஆனால் பிரான்சில் வாழும் தமிழ்க் குழந்தைகள் பிரெஞ்சு மொழியின் எண்முறைப் பற்றி எந்தச் சிந்தனையோ குழப்பமோ இன்றி எளிதாகக் கற்றுவிடுகின்றனர். நீங்களும் ஒன்றுக்குப் பலமுறை தொடர்ந்து மனபாடம் செய்தால் அவை தானகவே மனதில் பதிந்துவிடும்.
இப்பாடத்தை ஒரு செய்தியாகவோ பதிவாகவோ மட்டும் வாசித்து விட்டுச் செல்லாமல், உங்கள் மனதில் பதியும் வரை மீண்டும் மீண்டும் வாசித்து மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். சத்தமாக வாசித்து பயிற்சி செய்தால் எளிதாக மனதில் பதியும்.
சரி, மீண்டும் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.
எண்கள் தொடர்பான இந்தப் பாடத்தையும் பார்க்கவும்.
நன்றி!
அன்புடன்
ச. தங்கவடிவேல், பிரான்சு
_ _ _
Bon
ReplyDeletemerci
Delete