Frenchmoli | பிரெஞ்சுமொழி: பிரெஞ்சு மாதங்கள் (French Months of the Year in Tamil)
![]() |
FrenchMoli : Les mois de l'année en tamoul |
இன்றைய பிரெஞ்சுமொழி (FrenchMoli) பாடத்தில், நாம் பார்க்கப் போவது பிரெஞ்சு மொழியில் மாதங்களின் பெயர்களை எப்படி கூறவேண்டும் என்பதையாகும்.
அநேகமாக இவை தமிழர்களான எமக்குப் பெருஞ் சிரமம் இன்றி எளிதாகக் கற்க கூடியதாக இருக்கும். ஏனெனில், இவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில மாதங்களின் பெயர்கள் போல் கிட்டத்தட்ட இருப்பது என்பதுவே ஆகும்.
இருப்பினும் பிரெஞ்சு மொழியில் மாதங்களின் பெயர்களை எழுதும் முறையும் ஒலிக்கும் முறையும் ஆங்கிலத்தைப் போன்றல்லாமல் வேறுபட்டவை. அதனைச் சரியாக விளங்கிக்கொண்டோமானால், எளிதாகப் பிரெஞ்சு மாதங்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ளலாம்.
- இன்றைய இப்பாடமும் பிரெஞ்சு மொழியின் அடிப்படை பாடங்களில் ஒன்றாகும். பிரெஞ்சில் மாதங்களை “Les mois de l'année” என்பர்.
மேலேயுள்ள பிரெஞ்சு மாதங்களின் பெயர்களைப் பார்த்தால், ஆங்கிலத்தில் மாதங்களின் பெயர்களை எப்படி ஒலிக்கிறோமோ கிட்டத்தட்ட அதேபோன்றே இருப்பதைக் கவனிக்கலாம். ஆனால், இப்பெயர்களில் சில எழுத்துகள் வேறுபட்டிருப்பதைக் கூர்ந்துப் பாருங்கள். அத்துடன் ஒலிப்புப் பயிற்சிக்காகத் தமிழில் நீல நிறத்தில் வேறுபடுத்திக் காட்டியிருப்பதையும் கவனியுங்கள்.
- "மே" மற்றும் "யூன்" மாதப் பெயர்களின் கடைசி எழுத்து சற்று மாறுப்பட்ட வடிவில் சிறிய எழுத்தாக இடப்பட்டிருக்கும். அவ்வெழுத்தின் ஒலியை முழுமையாக ஒலிக்காமல், (கால் மாத்திரைக்கும் குறைவாக) மூக்கொலியுடன் ஒலிக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலேயே அப்படி இடப்பட்டுள்ளது.
- அதேபோன்றே செப்டெம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் போன்ற மாதங்களின் பிரெஞ்சுப் பெயர்களிலும் கடைசி எழுத்து சிறிய எழுத்தாக இடப்பட்டிருக்கும்; அதற்கான காரணம் அவ்வெழுத்துகள் முழுமையாக அல்லாமல் (கால் மாத்திரைக்கும் குறைவாக) மூக்கொலியுடன் ஒலிக்கப்படுபவை என்பதைக் குறிக்கவே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இப்பாடம் ஒரு சிறிய பாடமாகும். பிரெஞ்சு மொழியில் சொற்களை இணைத்து முழு வாக்கியமாக்குவதற்கு முன் அல்லது பிரெஞ்சு இலக்கணம் கற்பதற்கு முன், அடிப்படையில் நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய சொற்களில் இவையும் அடங்கும்.
இந்தப் பிரெஞ்சு மாதப் பெயர்களைத் திரும்பத் திரும்ப எழுதி அவற்றை எளிதில் மனதில் பதியும் வகையில் பயிற்சி செய்துக்கொள்ளுங்கள். ஒலிப்புப் பயிற்சி பெற விரும்புவோர் மீண்டும் மீண்டும் வாசித்து இச்சொற்களை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.
மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.
- இந்தப் பிரெஞ்சு பாடங்கள் பயனுள்ளவை என நீங்கள் கருதினால், இவற்றை பிரெஞ்சு மொழிக் கற்க விரும்பும் மாணவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் பகிருங்கள். அது பிரெஞ்சுக் கற்கும் எவரேனும் ஒருவருக்கு நீங்களும் உதவியதாக இருக்கும்.
நன்றி!
அன்புடன்
ச. தங்கவடிவேல், பிரான்சு
_ _ _
Comments
Post a Comment