சாதாரண நிகழ்கால பிரெஞ்சு வினை வடிவங்கள் (பட்டியல்)
பிரெஞ்சு மொழியில் காலங்கள் மூவகைப்படும். அவை இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றுமாம். ஒவ்வொரு காலத்திலும் ஒரு வினைச்சொல் பல வினை வடிவங்களைக் கொண்டிருக்கும். இப்பாடத்தில் நாம் நிகழ்கால வினைச்சொல்லின் வினை வடிவங்களைப் பார்ப்போம். பொதுவாக நாம் நமது அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி பயன்படக்கூடிய 100 சாதாரண நிகழ்கால வினைச்சொற்களின் வினை வடிவங்கள் இங்கே ஒரு அட்டவணையாக இடப்பட்டுள்ளது. இதில் ஒரு வினையின் மூல வடிவம் முதல் நேர்வரிசையிலும், அதன் தமிழ்ப் பொருள் இரண்டாவது நேர்வரிசையிலும், அதற்கடுத்த வரிசைகளில் வினை வடிவங்களும் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, " être " எனும் ஒரு மூல வினைச்சொல்லின் வினை வடிவங்கள் suis; es, est, sommes, êtes, sont ஆகியவை ஆகும். இவ்வினை வடிவங்கள் எவ்வாறு வாக்கியங்களில் பயன்படுகின்றன எனக் கீழுள்ள எடுத்துக்காட்டு வாக்கியங்கள் ஊடாகக் காணலாம். எடுத்துக்காட்டாக: Je suis Tu es Il/ Elle/ On est Nous sommes Vous êtes Ils/ Elles sont அதேபோன்றே 100 மூல வினைச்சொற்களும் அவற்றிற்கான வினை வடிவங்களும் கீழுள்ள அட்டவணையில் உள்ளன. பிரெஞ்சு கற்பதில...