வணக்கம் உறவுகளே! இந்தப் பிரெஞ்சுமொழி பாடத்தில், பிரெஞ்சு எண்களை 1 முதல் 100 வரை எப்படி எண்ண வேண்டும் என்று பார்ப்போம். பிரெஞ்சு மொழியில் எண்களை ' லெ நொம்bப்ர' (Les nombres) என்றழைப்பர். உங்கள் ஒலிப்புப் (உச்சரிப்பு) பயிற்சிக்காக, ஒவ்வொரு பிரெஞ்சு எண்ணினதும் ஒலிப்பு வடிவம் தமிழ் எழுத்துக்களில் எழுதிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ் எழுத்துக்கள் கொண்டு பிரெஞ்சு மொழிச் சொற்களை அல்லது பிரெஞ்சு மொழியின் ஒலிகளைத் துல்லியமாக எழுதிக்காட்டுதல் என்பது பெரும்பாலும் சாத்தியமானதல்ல. அதேவேளை பிரெஞ்சு எண்களின் ஒலிகளை எழுத்துவடிவில் எழுதிக் காட்டாமல், எவரும் எமது மொழிக் குடும்பத்துடன் தொடர்பில்லாத ஒரு ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த, பிரெஞ்சு மொழியின் ஒலிப்புமுறைமையை எளிதாகக் கற்கவும் இயலாது. எனவே முடிந்தவரை எளிதாகக் கற்பதற்குத் தமிழ் எழுத்துக்களால் எழுதிக்காட்டப்பட்டுள்ளன என்பதைக் கருத்தில் கொள்க. அதேவேளை தமிழ்த் தவிர்ந்த ஆங்கில எழுத்துக்களும் தமிழில் புழங்கும் கிரந்த எழுத்துக்களும் இடையிடையே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் கருத்தில் கொள்ளவும். கவனிக்கவும்: இன்னொன்றையும் நினைவில...
ஆங்கில அரிச்சுவடியில் போன்றே பிரெஞ்சு அரிச்சுவடியிலும் அதே 26 உரோமன் எழுத்துக்களே உள்ளன. ஆனாலும் ஆங்கில எழுத்துக்களின் ஒலிப்பு முறைமைக்கும் பிரெஞ்சு எழுத்துக்களின் ஒலிப்பு முறைமைக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. எனவே பிரெஞ்சு மொழியை முழுமையாகக் கற்பதற்கு, நாம் முதலில் பிரெஞ்சு அரிச்சுவடியில் உள்ள எழுத்துக்களின் ஒலிப்பு முறையைச் சரியாக ஒலிக்க (உச்சரிக்க) கற்றுக்கொள்ள வேண்டும். கவனிக்கவும் : எழுத்துக்களின் வரிவடிவம் ஒரே மாதிரி இருப்பதால், ஆங்கில அரிச்சுவடியில் உள்ள எழுத்துகளை ஒலிப்பது/ உச்சரிப்பது போன்று பிரெஞ்சு எழுத்துக்களை உச்சரிக்கக் கூடாது. பிரெஞ்சுமொழியில், பிரெஞ்சு அரிச்சுவடியை “ லல்fபbபே fப்ரொன்சே” (L’alphabet Français) என்பர். இச்சொற்றொடரைப் பார்த்தீர்களானால், இதில் உள்ள `t` மற்றும் கடைசியில் உள்ள `s` எழுத்துக்கள் ஒலிக்கப்படுவதில்லை. அவற்றைப் பிரெஞ்சில் மௌன எழுத்துக்கள் (Lettres de silence) என்பர். அதனை எதிர்வரும் "பிரெஞ்சு ஒலிப்பு முறைமை" பாடங்களில் விரிவாகப் பார்க்கலாம். இன்று இப்பாடத்தை மட்டும் பார்ப்போம். பிரெஞ்சு நெடுங்கணக்கு அல்லது பிரெஞ்சு அரிச்சுவடி முதலி...
வணக்கம், வாருங்கள் உறவுகளே! பிரெஞ்சு மொழியில் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி பயன்படும் 25 நிகழ்கால வாக்கியங்களைக் கற்போம். இவை தன்மை ஒருமை வாக்கியங்களாகும். பொதுவாகத் தமிழ் வாக்கிய கட்டமைப்பு எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை (S + O + V) என்னும் வரிசையமைப்பைக் கொண்டிருக்கும். அதாவது எழுவாய் முதலிலும், செயப்படுபொருள் இரண்டாவதாகவும், பயனிலை கடைசியாகவும் அமையும். அதாவது, ஒரு சாதாரண நிகழ்கால தமிழ் வாக்கியத்தை எடுத்துக்கொண்டால், " நான் ... இருக்கிறேன். " என்று வரும். அதேவேளை, பிரெஞ்சு வாக்கிய கட்டமைப்பு எழுவாய் + பயனிலை + செயப்படுபொருள் (S + V + O) என்னும் வரிசையமைப்பைக் கொண்டிருக்கும். அதாவது எழுவாய் முதலிலும், பயனிலை இரண்டாவதாகவும், செயப்படுபொருள் கடைசியாகவும் அமையும். அதேவேளை, ஒரு சாதாரண நிகழ்கால பிரெஞ்சு வாக்கியத்தை எடுத்துக்கொண்டால், " Je suis ... " என்று வரும். எடுத்துக்காட்டாக: Je suis fatigué. நான் களைப்பாக இருக்கிறேன் . இந்த வேறுபாட்டை சரியாக விளங்கிக்கொண்டீர்களானால், பிரெஞ்சு மொழியின் வாக்கிய கட்டமைப்புகளை எளிதாகக் கற்றுக்கொள்ளலாம்.இதனை மேல...
Comments
Post a Comment