சாதாரண நிகழ்கால பிரெஞ்சு வினை வடிவங்கள் (பட்டியல்)
பிரெஞ்சு மொழியில் காலங்கள் மூவகைப்படும். அவை இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றுமாம். ஒவ்வொரு காலத்திலும் ஒரு வினைச்சொல் பல வினை வடிவங்களைக் கொண்டிருக்கும். இப்பாடத்தில் நாம் நிகழ்கால வினைச்சொல்லின் வினை வடிவங்களைப் பார்ப்போம்.
பொதுவாக நாம் நமது அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி பயன்படக்கூடிய 100 சாதாரண நிகழ்கால வினைச்சொற்களின் வினை வடிவங்கள் இங்கே ஒரு அட்டவணையாக இடப்பட்டுள்ளது. இதில் ஒரு வினையின் மூல வடிவம் முதல் நேர்வரிசையிலும், அதன் தமிழ்ப் பொருள் இரண்டாவது நேர்வரிசையிலும், அதற்கடுத்த வரிசைகளில் வினை வடிவங்களும் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, "être" எனும் ஒரு மூல வினைச்சொல்லின் வினை வடிவங்கள் suis; es, est, sommes, êtes, sont ஆகியவை ஆகும். இவ்வினை வடிவங்கள் எவ்வாறு வாக்கியங்களில் பயன்படுகின்றன எனக் கீழுள்ள எடுத்துக்காட்டு வாக்கியங்கள் ஊடாகக் காணலாம்.
எடுத்துக்காட்டாக:
Je suis
Tu es
Il/ Elle/ On est
Nous sommes
Vous êtes
Ils/ Elles sont
அதேபோன்றே 100 மூல வினைச்சொற்களும் அவற்றிற்கான வினை வடிவங்களும் கீழுள்ள அட்டவணையில் உள்ளன.
பிரெஞ்சு கற்பதில் தொடக்க நிலையில் உள்ளோர் இந்த 100 வினைச்சொற்களையும் அவற்றின் வினை வடிவங்களை எப்படி வாக்கியங்களில் பயன்படுத்தலாம் என்பதையும் கற்றுக்கொண்டால், எளிதாகப் பிரெஞ்சு பேசும் நிலையை எட்டிவிடலாம்.
முதலாவது சொல்லையும் இரண்டாவது சொல்லையும் கவனியுங்கள். அவ்விரண்டினதும் தமிழ்ப் பொருள் "இரு" என்றே இடப்பட்டுள்ளது. இருப்பினும் அவ்விரண்டு சொற்களும் வாக்கியங்களில் பயன்படும் போது இரண்டினதும் பொருள் வேறுபடுவதைக் கவனியுங்கள்.
எடுத்துக்காட்டாக:
Je suis sri lankais. = நான் இலங்கையன். (இலங்கையனாக இருக்கிறேன்.)
J'ai une voiture. = எனக்கு ஒரு மகிழுந்து இருக்கிறது. (உடைமையாய் இருக்கிறது.)
கவனிக்கவும்: பிரெஞ்சு மொழியில் ஒரு நிகழ்கால வினைச்சொல் தன்னிலை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடத்திற்கு ஏற்பவும், ஒருமை பன்மை ஆகிய எண்ணிக்கைக்கு ஏற்பவும் வினை வடிவங்கள் மாறுபடும். அவற்றை எளிதாகக் கற்கும் வகையில் வெவ்வேறு நிறங்களால் வேறுபடுத்திக்காட்டப்பட்டுள்ளன.
இவற்றை உங்கள் மனதில் பதியும் வகையில் மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்.
இந்த வினை வடிவங்கள் எப்படி வாக்கியங்களில் பயன்படுகின்றன என்பதை எதிர்வரும் பாடங்களில் பார்ப்போம்.
நன்றி!
அன்புடன்
ச. தங்கவடிவேல், பிரான்சு
Comments
Post a Comment