பிரெஞ்சு - நிகழ்காலம் - தன்னிலை ஒருமை வாக்கியங்கள் (Je suis ...)
வணக்கம், வாருங்கள் உறவுகளே!
பிரெஞ்சு மொழியில் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி பயன்படும் 25 நிகழ்கால வாக்கியங்களைக் கற்போம். இவை தன்மை ஒருமை வாக்கியங்களாகும்.
பொதுவாகத் தமிழ் வாக்கிய கட்டமைப்பு எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை (S + O + V) என்னும் வரிசையமைப்பைக் கொண்டிருக்கும். அதாவது எழுவாய் முதலிலும், செயப்படுபொருள் இரண்டாவதாகவும், பயனிலை கடைசியாகவும் அமையும்.
அதாவது, ஒரு சாதாரண நிகழ்கால தமிழ் வாக்கியத்தை எடுத்துக்கொண்டால், "நான் ... இருக்கிறேன்." என்று வரும்.
அதேவேளை, பிரெஞ்சு வாக்கிய கட்டமைப்பு எழுவாய் + பயனிலை + செயப்படுபொருள் (S + V + O) என்னும் வரிசையமைப்பைக் கொண்டிருக்கும். அதாவது எழுவாய் முதலிலும், பயனிலை இரண்டாவதாகவும், செயப்படுபொருள் கடைசியாகவும் அமையும்.
அதேவேளை, ஒரு சாதாரண நிகழ்கால பிரெஞ்சு வாக்கியத்தை எடுத்துக்கொண்டால், "Je suis ..." என்று வரும்.
எடுத்துக்காட்டாக:
Je suis fatigué.
நான் களைப்பாக இருக்கிறேன்.
இந்த வேறுபாட்டை சரியாக விளங்கிக்கொண்டீர்களானால், பிரெஞ்சு மொழியின் வாக்கிய கட்டமைப்புகளை எளிதாகக் கற்றுக்கொள்ளலாம்.இதனை மேலும் எளிதாக விளங்கிக்கொள்வதற்குக் கீழுள்ள 25 வாக்கியங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
இனி, 25 நிகழ்கால (தன்மை ஒருமை) வாக்கியங்களைப் பயிற்சி செய்வோம்.
Je suis étudiant(e).
ஜு-சுவி எத்து-தியான்
நான் மாணவனாக இருக்கிறேன். (நான் மாணவன்.)
Je suis un enfant..
ஜு சுவி அ னோ-போன்
நான் ஒரு சிறுவனாக இருக்கிறேன். (நான் ஒரு சிறுவன்.)
Je suis Arun.
ஜு சுவி அருண்
நான் அருண்.
Je suis fatigué(e).
ஜு சுவி பத்திகே
நான் களைப்பாக இருக்கிறேன்.
Je suis prêt(e).
ஜு-சுவி ப்-ரெத்
நான் தயாரக இருக்கிறேன்.
Je suis content(e).
ஜு-சுவி கொன்-தோ-ன்த்
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
Je suis malade.
ஜு-சுவி ம-லாத்
நான் உடல்நலமின்றி இருக்கிறேன்.
Je suis stressé.
ஜு-சுவி ஸ்த்-ரெஸ்சே
நான் (மன)அழுத்தத்தில் இருக்கிறேன்.
Je suis à la maison.
ஜு-சுவி அ-லா மேசோன்
நான் வீட்டில் இருக்கிறேன்.
Je suis au travail.
ஜு-சுவி ஒ த்ர-வாய்
நான் வேலையில் இருக்கிறேன்.
Je suis à l'école.
ஜு-சுவி அ லெ-கோல்
நான் பள்ளிக்கூடத்தில் இருக்கிறேன்.
Je suis en vacances.
ஜு-சுவி ஒ வெக்-கோன்ஸ்
நான் விடுப்பில் இருக்கிறேன்.
Je suis dans la voiture.
ஜு-சுவி தான் லா வு-வாச்சூர்
நான் மகிழுந்தினுள் இருக்கிறேன்.
Je suis surprise(e).
ஜு-சுவி சு-ர்-பிறி
நான் வியப்பில் இருக்கிறேன்.
Je suis confus(e).
ஜு-சுவி கொன்-புஸ்
நான் குழப்பத்தில் இருக்கிறேன்.
Je suis satisfait(e).
ஜு-சுவி சத்-திஸ்-பே
நான் மனநிறைவில் இருக்கிறேன்.
Je suis en colère.
ஜு-சுவி ஒ கொ-லேர்
நான் கோபமாக இருக்கிறேன்.
Je suis professeur.
ஜு-சுவி ப்ரோ-பெஸ்ஸூர்
நான் ஆசிரியராக இருக்கிறேன். (நான் ஆசிரியர்.)
Je suis triste.
ஜு-சுவி த்-றிஸ்த்
நான் கவலையாக இருக்கிறேன்.
Je suis libre.
ஜு-சுவி லீ-ப்ர்
நான் சும்மா இருக்கிறேன்.
Je suis calme.
ஜு-சுவி கால்-ம்
நான் அமைதியாக இருக்கிறேன்.
Je suis en colère.
ஜு-சுவி ஒ கொ-லே-ர்
நான் கோபமாக இருக்கிறேன்.
Je suis.nerveux
ஜு-சுவி நே-ர்-வூ
நான் பதட்டமாக இருக்கிறேன்.
Je suis patient.
ஜு-சுவி பேசி-யோ-ன்
நான் பொறுமையாக இருக்கிறேன்.
Je suis artiste
ஜு-சுவி ஆர்-திஸ்த்
நான் கலைஞனாக இருக்கிறேன்.
கவனிக்கவும்: பிரெஞ்சு மொழியில் நிகழ்கால தன்மை ஒருமை சொல்லான “Je” உடன் “suis” என்னும் வினைச்சொல் இணைந்துவரும் வாக்கியங்கள் 25 இப்பாடத்தில் வழங்கப்பட்டுள்ளன. இவை அன்றாட வாழ்வில் அடிக்கடி பயன்படும் வாக்கியங்களாகும்.
இவ்வாக்கியங்களின் வினா விடை பகுதியை இங்கே காணலாம்.
குறிப்பு: மேலேயுள்ள வாக்கியங்களில் சில பிரெஞ்சு செயற்படுபொருள் சொற்களின் ஈற்றில் அடைப்புக்குறிக்குள் இன்னுமொரு (e) இடப்பட்டிருக்கும். அது பெண்பால் சொல் என்பதை உணர்த்த இடப்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொள்க.
எடுத்துக்காட்டாக:
- Je suis étudiant. = நான் மாணவன்.
- Je suis étudiante. = நான் மாணவி
Comments
Post a Comment