பிரெஞ்சு எண்கள் 0 இருந்து 1,000,000,000 வரை (French Numbers in a Different Order : 0 - 1,000,000,000)

Les nombres de 0 à 1 000 000 000 வணக்கம், உறவுகளே! நாம் ஏற்கெனவே பிரெஞ்சு எண்கள் 1 முதல் இருந்து 100 வரை எப்படி எண்ண வேண்டும் என்பதைப் பார்த்தோம். ஆனால் இந்தப் பதிவில் சற்று வேறுபட்ட வகையில் எண்களை எப்படி எண்ணலாம் என்பதைப் பார்க்கப் போகிறோம். அதாவது, ஒன்று, இரண்டு, மூன்று எனும் வரிசைப்படி அல்லாமல், சுழியம், பத்து, இருபது, முப்பது எனும் வரிசையில். அதுமட்டுமல்ல; நூறுக்குப் பிறகு, ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் எனக் கடைசியாக ஒரு மில்லியாட் வரையும், பிரெஞ்சு மொழியில் எண்களை எப்படி எண்ண வேண்டும் என்பதைப் பார்ப்போம். குறிப்பு-1: எண்களைப் பிரெஞ்சில் ஒலிக்கும் போது, அவைக்கான தமிழ் ஒலிப்பு வடிவம் தமிழில் எழுதிக்காட்டப்பட்டுள்ளன. அப்போது, சிலவிடங்களில் உரோமன் எழுத்துகளும் தமிழில் புழங்கும் கிரந்த எழுத்துகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும். குறிப்பு-2: பிரெஞ்சு மொழியின் எண்களை இலக்கங்களால் எழுதுவதானாலும் சரி, எழுத்துகளால் எழுதுவதானாலும் சரி, ஒப்பீட்டளவில் ஏனைய மொழிகளைவிட மிகவும் சிக்கலானவை. இச்சிக்கலைத் தீர்க்கும் வகையில் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவ...