FrenchMoli Introduction - பிரெஞ்சுமொழி வலைத்தள அறிமுகம்

வணக்கம்! வாருங்கள் உறவுகளே! இந்தப் பிரெஞ்சுமொழி - FRENCHMOLI வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சி! முதலில், இத்தளத்தைப் பற்றியும் இதன் பாடத் திட்டம் பற்றியும் ஒருசில வரிகள் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். நான் இத்தளத்தை ஆரம்பிக்கும் பொழுது, பிரான்சுக்கோ அல்லது பிரெஞ்சு மொழி பேசும் காலனியொன்றுக்கோ புதிதாகக் காலடி வைக்குமொருவர், முதன்முதலில் பிரெஞ்சு மொழியினர் ஒருவரை எதிர்கொள்ளும் போது அவர் எவ்வாறு தொடர்பு கொள்வார், அவரது தொடர்பாடலுக்குப் பயன்படும் அடிப்படைச் சொற்கள் எவையாக இருக்கும், எனவெண்ணினேன். அப்போது ("வணக்கம்!" எனுஞ்சொல்லுக்கு இணையான) "Bonjour!" என்னும் சொல்லைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டுமென உணர்ந்தேன். (ஏனெனில் நான் இந்த நாட்டுக்கு வரும் போது எனக்கு அச்சொல்லும் தெரியாது.) அதனடிப்படையில் இத்தளத்தின் முதல் பாடமாக முகமன் சொற்கள் என்னும் பாடம் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து "அறிமுக உரையாடல் சொற்கள்", சிறிய உரையாடலுக்குத் தேவையான "அடிக்கடி பயன்படும் சொற்றொடர்கள்" போன்றவை முதன்மைப் பாடங்களா...