பிரெஞ்சுமொழி - உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும் (FrenchMoli - French Vowels and Consonants in Tamil)

பிரெஞ்சு மொழி உயிர் எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள்
ஒரு மனிதனின் உடலும் உயிரும் ஒருங்கே இணைந்து எப்படிச் செயல்படுகின்றதோ, அப்படியே தமிழ்மொழி அரிச்சுவடியில் உள்ள மெய்யெழுத்துகளும் உயிரெழுத்துகளும் ஒருங்கிணைந்து உயிர்மெய் எழுத்துகளைத் தோற்றுவிக்கின்றன. 

அனால், பிரெஞ்சு மொழி அரிச்சுவடியில் தனித்தனியான உயிர்மெய் எழுத்துகள் இல்லை. அதனால் பிரெஞ்சு அரிச்சுவடியில் உள்ள ஒலிகளை "les syllabes" எனத் தனியாகக் கற்க வேண்டும். அவற்றை எதிர்வரும் பாடங்களில் விரிவாகவும் விளக்கத்துடனும் பார்க்கலாம்.

இன்றைய பாடத்தில் பிரெஞ்சு அரிச்சுவடியில் உள்ள எழுத்துகளின் ஒலிப்புகளை மட்டும் பார்ப்போம்.

பிரெஞ்சுமொழி அரிச்சுவடியில் (ஆங்கில அரிச்சுவடி போன்றே) மொத்தம் 26 எழுத்துகள் உள்ளன. அவற்றில் 6 உயிர் எழுத்துகளும் 20 மெய்யெழுத்துகளும் உள்ளடங்கும்.  

பிரெஞ்சு மொழியில் உயிரெழுத்துகளை "லே வொயல்" (Les Voyelles) என்பர். உயிரெழுத்துகள் 6 உள்ளன. அவற்றைக் கீழே பார்க்கவும். உயிரெழுத்துகளின் ஒலிப்புகள் தமிழில் எழுதிக்காட்டப்பட்டுள்ளன.

பிரெஞ்சு உயிரெழுத்துகள் (Les Voyelles)

  • A = அ

  • E = ஹு 

  • I  =  ஈ 

  • O = ஓ

  • U = ஊ

  • Y = இ-கிரெக் (அரை உயிரெழுத்து (La-semi voyelle)) என்பர்.

குறிப்பு: ஆங்கிலத்தில் போன்றே பிரெஞ்சிலும் அதே 5 உயிரெழுத்துகளே உள்ளன; என்றாலும்; 'y' எழுத்தை ஒரு அரை-உயிரெழுத்தாகக் (semi-vowel) கொள்வதனால் அதனையும் சேர்த்து பிரெஞ்சில் மொத்தம் 6 உயிரெழுத்துகள் ஆகும்.

பிரெஞ்சு மெய்யெழுத்துகள் (Les Consonnes)

பிரெஞ்சு மொழியில் மெய்யெழுத்துகளை "லே கொன்சோன்" (Les Consonnes) என்பர். பிரெஞ்சுமொழியில்  மொத்தம் 20 மெய்யெழுத்துகள் ஆகும். இவ்வெழுத்துகளின் ஒலிப்பு வடிவம் தமிழ் எழுத்துகளில் எழுதிக்காட்டப்பட்டுள்ளன.

  • B = bபே

  • C = சே

  • D = dதே

  • F = எfப்

  • G = ஜே (J)

  • H = ஆஷ்

  • J = ஜி (G)

  • K = க

  • L = எல்

  • M = எம்

  • N = என்

  • P = பே

  • Q = கிவ்

  • R = ஏர்

  • S = எஸ்

  • T = த்தே

  • V = வே

  • W = துபுளு-வே

  • X = இக்ஸ்

  • Z = செzத்

குறிப்பு: 'y' எழுத்தை ஒரு அரை உயிரெழுத்தாகக் கொள்வதனால் 6 உயிரெழுத்துகள் தவிர்ந்த, மிகுதி 20 எழுத்துகளுமே மெய்யெழுத்துகள் ஆகும். 


இந்தப் பாடத்தில் வழங்கப்பட்டுள்ள பிரெஞ்சு மொழியின் உயிரெழுத்துகளின் ஒலிப்புகளையும் மெய்யெழுத்துகளின் ஒலிப்புகளையும் மனதில் பதியும் வகையில் பாடமாக்கிக்கொள்ளுங்கள்.


எதிர்வரும் பாடங்களில் பிரெஞ்சு எழுத்துகளின் அசைகள் (les syllabes) பற்றிப் பார்ப்போம்.


நன்றி!


அன்புடன் 

ச. தங்கவடிவேல், பிரான்சு

_ _ _

பி.கு.: கீழுள்ள ஐகொன்களைச் சொடுக்கி, எமது சமூக வலைப்பக்கங்களான: முகநூல் | இன்சுடாகிராம் | டுவிட்டர் | பின்டரசுட் | லின்கிடின் போன்றவற்றின் ஊடாகவும் எம்முடம் இணைந்துகொள்ளலாம்.

        

Comments

Popular posts from this blog

பிரெஞ்சு எண்கள் 1 - 100 (French Numbers 1 - 100 in Tamil)

பிரெஞ்சு கிழமை நாட்கள் (French Days of the Week in Tamil)

பிரெஞ்சு எண்கள் 0 இருந்து 1,000,000,000 வரை (French Numbers in a Different Order : 0 - 1,000,000,000)