பிரெஞ்சுமொழி - உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும் (FrenchMoli - French Vowels and Consonants in Tamil)

ஒரு மனிதனின் உடலும் உயிரும் ஒருங்கே இணைந்து எப்படிச் செயல்படுகின்றதோ, அப்படியே தமிழ்மொழி அரிச்சுவடியில் உள்ள மெய்யெழுத்துகளும் உயிரெழுத்துகளும் ஒருங்கிணைந்து உயிர்மெய் எழுத்துகளைத் தோற்றுவிக்கின்றன. அனால், பிரெஞ்சு மொழி அரிச்சுவடியில் தனித்தனியான உயிர்மெய் எழுத்துகள் இல்லை. அதனால் பிரெஞ்சு அரிச்சுவடியில் உள்ள ஒலிகளை " les syllabes" எனத் தனியாகக் கற்க வேண்டும். அவற்றை எதிர்வரும் பாடங்களில் விரிவாகவும் விளக்கத்துடனும் பார்க்கலாம். இன்றைய பாடத்தில் பிரெஞ்சு அரிச்சுவடியில் உள்ள எழுத்துகளின் ஒலிப்புகளை மட்டும் பார்ப்போம். பிரெஞ்சுமொழி அரிச்சுவடியில் (ஆங்கில அரிச்சுவடி போன்றே) மொத்தம் 26 எழுத்துகள் உள்ளன. அவற்றில் 6 உயிர் எழுத்துகளும் 20 மெய்யெழுத்துகளும் உள்ளடங்கும். பிரெஞ்சு மொழியில் உயிரெழுத்துகளை " லே வொயல்" (Les Voyelles) என்பர். உயிரெழுத்துகள் 6 உள்ளன. அவற்றைக் கீழே பார்க்கவும். உயிரெழுத்துகளின் ஒலிப்புகள் தமிழில் எழுதிக்காட்டப்பட்டுள்ளன. பிரெஞ்சு உயிரெழுத்துகள் (Les Voyelles) A = அ E = ஹு I = ஈ O = ஓ U = ஊ Y = இ-கிரெக் (அரை உயிரெழு...